News
இதுதான் காஜலின் அழகிய ஆண் குழந்தை! – முதன்முதலாக வெளியான போட்டோ!
நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அதன் முதல் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

தமிழில் பொம்மலாட்டம் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்த காஜல் அகர்வால் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் பல படங்கள் நடித்துள்ளார்.

தொடர்ச்சியாக படம் நடித்து வந்த காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கர்ப்பமான காஜல் அடிக்கடி கர்ப்பக்கால போட்டோஷூட்டுகளையும் நடத்தி வெளியிட்டு வந்தார்.

காஜல் அகர்வாலுக்கு நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு நெயில் கிச்சுலு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது காஜல் குழந்தைக்கு முத்தமிடும் முதல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
