5 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல் சாதனை..! 1000 கோடியை நெருங்கியாச்சு போல..!
தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே தற்சமயம் சண்டை காட்சிகள் கொண்ட படங்களுக்கு மவுஸ் அதிகரித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில் தொடர்ந்து பெரிய ஹிட் கொடுக்கும் படங்கள் எல்லாம் இந்த மாதிரியான படங்களாக தான் இருக்கின்றன. அந்த வரிசையில் ஏற்கனவே தெலுங்கில் படமாக்கப்பட்டு இந்திய அளவில் வெளியான புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து இருந்தது.
இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் குறித்து பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றார் போல உருவான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளே 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரிய சாதனையை செய்தது.
5 நாள் வசூல்:

தமிழ் சினிமாவில் உள்ள எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையை தற்சமயம் புஷ்பா திரைப்படம் செய்து வருகிறது என்று கூறலாம். இந்த நிலையில் படம் வெளியாகி ஐந்து நாட்கள் மட்டுமே ஆன நிலையில் உலக அளவில் 900 கோடி ரூபாய் வசூல் செய்து கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு டஃப் கொடுத்திருக்கிறது புஷ்பா 2 திரைப்படம்.
போற போக்கை பார்த்தால் தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 திரைப்படம்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது தற்சமயம் தென்னிந்தியாவில் அதிக வசூல் கொடுக்கும் படங்களில் தெலுங்கு சினிமாதான் முன்னணியில் இருக்கிறது.