Connect with us

அமரன் படம் மீது குற்றச்சாட்டு வைத்த ராணுவ அதிகாரி.. பதிலடி கொடுத்த இயக்குனர்.!

rajkumar periyasamy

Tamil Cinema News

அமரன் படம் மீது குற்றச்சாட்டு வைத்த ராணுவ அதிகாரி.. பதிலடி கொடுத்த இயக்குனர்.!

Social Media Bar

Directed by Rajkumar Periyasamy, the recently released movie Amaran. The film has collected more than 200 crores within 10 days of its release.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக அமரன் திரைப்படம்தான் இருக்கிறது இத்தனைக்கும் மற்ற திரைப்படங்கள் அளவிற்கு இந்த படத்தில் அவ்வளவாக சிவகார்த்திகேயன் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை.

இருந்தாலும் கூட சிவகார்த்திகேயனுக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. எனவே இனி சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாகதான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே இந்த திரைப்படம் குறித்து நிறைய சர்ச்சைகள் ஒரு பக்கம் எழுந்து வந்தன.

amaran

amaran

அமரன் படத்தில் சர்ச்சை:

ஒரு பக்கம் முகுந்த் வரதராஜன் ஜாதி என்னவென்று ஏன் படத்தில் கூறவில்லை என்று ஒரு கும்பல் பேசி வந்தது. இன்னொரு பக்கம் இராணுவ அதிகாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளித்து வருகிறார் ராஜ்குமார் பெரியசாமி .அந்த வகையில் ராணுவம் குறித்த குற்ற சாட்டுக்கு அவர் பதில் அளிக்கும் போது இந்த திரைப்படம் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ ஒப்புதல் பெற்ற பின்னர் தான் படமாக உருவாக்கப்பட்டது.

படத்தை சென்சருக்கு அனுப்புவதற்கு முன்பே பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நாங்கள் போட்டு காட்டினோம். அவர்கள் கூறிய அறிவுரைகளையும் கருத்துகளையும் கொண்டு பாடத்தில் திருத்தங்களை செய்த பின்பு தான் சென்சாருக்கே அனுப்பினோம் அவர்கள் கொடுத்த சான்றிதழ் எங்களிடம் உள்ளது எனவே யாரோ குற்றம் சொல்கிறார்கள் என்று அதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.

Articles

parle g
madampatty rangaraj
To Top