தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகள் மிகக் குறைவுதான். அப்படியான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடிக்க கூடிய நடிகை என்பதாலேயே சாய் பல்லவி மிக பிரபலமானவர்.
பெரும்பாலும் தென்னிந்திய சினிமாவில் நிறைய நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் கவர்ச்சியாக நடிக்க துவங்கி விடுவார்கள். ஆனால் இப்பொழுது வரை கவர்ச்சியாக நடிக்காத ஒரு நடிகையாக சாய் பல்லவி இருந்து வருகிறார்.
சாய்பல்லவி நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் அதிக வரவேற்பு பெற்றது. 300 கோடி ரூபாய் வரையில் வசூல் பெற்ற இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு சாய்பல்லவி முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
சாய்ப்பல்லவி பிரச்சனை:

முக்கியமாக ஆந்திர பிரதேசம் மாதிரியான மாநிலங்களில் அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைப்பதற்கு சாய் பல்லவிதான் முக்கிய காரணமாக இருந்தார்.
ஏனெனில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் வந்த ஒரு காட்சி தற்சமயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. அமரன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய மொபைல் நம்பரை எழுதிக் கொடுப்பதாக ஒரு காட்சி இருக்கும்.
அதில் எழுதப்பட்ட மொபைல் நம்பர் சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் மொபைல் எண் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பலரும் அது சாய் பல்லவியின் நம்பர் என்று நினைத்து இந்த இளைஞருக்கு போன் செய்திருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த இளைஞர் தற்சமயம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அமரன் திரைப்பட குழு மீது வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார் இந்த நிலையில் அவருக்கு இழப்பீடு கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்துதான் பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன.