கடைசி நேரத்துல கழட்டிவிட்டு போன கதாநாயகி!.. பிரச்சனையில் சிக்கிய அமீர்.. ஒரே சோதனைதான் போல!..

தமிழில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வகையில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அதில் முக்கியமான திரைப்படம் பருத்திவீரன்.

பருத்திவீரன் திரைப்படம் நடிகர் கார்த்திக், நடிகை ப்ரியாமணி, இயக்குனர் அமீர் மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த படத்தை அவ்வளவு சிறப்பாக இயக்கியிருந்தார் அமீர். ஆனால் தற்சமயம் அந்த படம்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Social Media Bar

இந்த நிலையில் அமீர் ஒரு பேட்டியில் கூறும்போது நடிகை ப்ரியாமணி குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருந்தார். அதாவது முத்தழகு கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி நடித்த பிறகு படத்திற்கான டப்பிங்கையும் அவரே செய்ய வேண்டும் என கூறிவிட்டார் அமீர்.

அதில் பிரச்சனை என்னவென்றால் ப்ரியாமணிக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. மேலும் கிராமிய மொழியில் பேச வேண்டும். ஆனாலும அவருக்கு வசனத்தை கற்றுக்கொடுத்து டப்பிங் செய்து கொண்டிருந்தார் அமீர். அப்போது நியூ இயர் விழாவிற்கு எங்கோ செல்ல வேண்டும் என விடுப்பு கேட்டிருக்கிறார் ப்ரியாமணி.

ஆனால் படத்தின் முக்கால்வாசி டப்பிங் வேலைகள் முடிந்திருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் இருந்து டப்பிங்கை முடித்து செல்லலாம் என அமீர் கூறியும் அதை ப்ரியாமணி கேட்கவில்லை. இதனால் கடுப்பான அமீர் போறதா இருந்தா திரும்ப வராத. அப்படியே போயிடு என கூறியுள்ளார். அதன் படியே ப்ரியாமணியும் திரும்ப வரவில்லை.

பிறகு வேறு ஒருவரை வைத்து மீதமிருந்த டப்பிங் வேலைகளை முடித்துள்ளார் அமீர். இதை அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.