இந்த மாதிரி விளம்பரம் செய்யாதீங்க! –  அமிதா பச்சனை எச்சரித்த மருத்துவர்கள்!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் அமிதாப்பச்சன். ஆனால் தற்சமயம் அவருக்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

எனவே அவர் விளம்பரங்களில் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் நடித்த பிஸ்கட் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் பிஸ்கட்டின் பல நன்மைகளை கூறி அது குழந்தைகளுக்கு உகந்தது என கூறியிருந்தார். மேலும் ஆரோக்கியமற்ற இந்தியாவை ஆரோக்கியமாக்குவோம் என்ற வார்த்தையை அவர் உபயோகித்திருந்தார்.

இதனையடுத்து குழந்தை நல மருத்துவர்கள் இது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலில் ஒரு பிஸ்கட் முழுவதுமாக கோதுமையில் செய்யப்படுவதில்லை. அது கோதுமையில் செய்யப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார் அமிதாப். மேலும் பிஸ்கட்டை விட நமது வீட்டில் செய்யப்படும் உணவுகளே ஆரோக்கியமானது ஆகும்.

பிஸ்கட்டில் கொழுப்பு, சர்க்கரை, சோடியம் இவை அனைத்துமே அதிகமாக இருக்கும். எனவே பிஸ்கட்டுகள் குழந்தைகள் உடல் நலத்திற்கு உகந்தவை அல்ல. இது அவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்தலாம். எனவே மக்களை தவறான வழியில் கொண்டு செல்ல வேண்டாம் என கூறி கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்கு இன்னும் அமிதாப்பச்சன் பதில் கடிதம் எழுதவில்லை.

Refresh