Connect with us

அந்த சம்பவத்திற்கு பிறகு கிரிக்கெட் ஆசையை விட்டுட்டேன்! – அமிதாப் பச்சனுக்கு நடந்த சோகம்!

Actress

அந்த சம்பவத்திற்கு பிறகு கிரிக்கெட் ஆசையை விட்டுட்டேன்! – அமிதாப் பச்சனுக்கு நடந்த சோகம்!

Social Media Bar

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் அமிதாப் பச்சன். 1975 ல் வெளியான ஷோலே திரைப்படம் மூலம் அறிமுகமான அமிதாப் பச்சன் பல 100 படங்களில் நடித்து ஹிந்தி சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலேயே தமக்கென ஒரு அடையாளத்தை பெற்றவர். இதுவரை தமிழில் நேரடியாக எந்தப் படங்களிலும் நடித்துராத அமிதாப் பச்சன் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் அமிதாப்பச்சனுக்கு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் அமிதாப் பச்சன் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்துக்கு கூட செல்லவில்லை.

இது குறித்து வருத்தத்துடன் பேசிய அவர் “சிறுவயதிலிருந்தே எனக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் இந்திய அணி விளையாடுகிறது என்றால் கண்டிப்பாக பார்த்து விடுவேன். ஆனால் கிரிக்கெட்டை நேசிக்கும் எனக்கு மைதானத்திற்கு போய் பார்க்க மனம் வரவில்லை. ஏனென்றால் நான் எப்பொழுதெல்லாம் மைதானத்திற்கு சென்று கிரிக்கெட் பார்க்கிறேனோ அப்பொழுதெல்லாம் எனக்கு பிடித்த அணி தோல்வியை சந்தித்துவிடுகிறது.

அதனால் நான் கிரிக்கெட் விளையாட்டுகளை டிவியில் மட்டுமே பார்த்து ரசிக்கிறேன்” என்று கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிக்கு செல்வீர்களா என்று கேட்டபோது “நேரில் சென்று பார்க்க விருப்பமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்“ என்று கூறியுள்ளார். தனக்கு மைதானத்தில் சென்று கிரிக்கெட் பார்க்க ஆசை இருந்தும் பிடித்த அணி தோற்றுவிடக்கூடாது என்று டிவியிலேயே கிரிக்கெட் தொடரை பார்த்து வரும் அமிதாப் பச்சன் குறித்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

To Top