வெளிநாட்டு அழகிகளுக்கு சவால் விடும் எமி ஜாக்ஷன்.. குழந்தை பிறந்த பிறகும் எப்படி இருக்காரு பாருங்க!..
மதராசபட்டினம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை எமி ஜாக்சன். பெரும்பாலும் வட இந்திய நடிகைகள்தான் தமிழ் சினிமாவிற்கு வந்து தமிழில் நடித்து பெரிய வரவேற்பு பெறுவார்கள்.
ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் பெரும் நடிகையாக மாறியவர் எமி ஜாக்சன் மட்டும்தான். எமி ஜாக்சனுக்கு முன்பு திரையுலகில் எந்த ஒரு நடிகையும் வெளிநாட்டிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமானது கிடையாது.

தமிழில் வரவேற்பு:
அப்படி ஒரு சிறப்பை பெற்ற எமி ஜாக்சனுக்கு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களும் உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்தான். மதராசபட்டினம் திரைப்படத்தில் வெள்ளைக்கார துரையம்மாவாகவே நடித்திருந்தார் எமி ஜாக்சன்.

அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பொருந்தி இருந்தது. அதற்குப் பிறகு தாண்டவம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார்.
இருந்தாலும் கெத்து திரைப்படத்தில்தான் பார்ப்பதற்கு நம்ம ஊர் பொண்ணு மாதிரியே இருப்பார் எமி ஜாக்சன். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான மிஷின் சாப்டர் ஒன் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் எமி ஜாக்சன் நடித்து உள்ளார்.

திருமண வாழ்க்கை:
சில காலங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்ட எமி ஜாக்சன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார். அவ்வப்போது திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும்போது மட்டும் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று விடுவார் எமி ஜாக்சன்.

மெரிக்காவை சேர்ந்த பெண் என்றாலும் கூட சினிமாவில் ஏக்கசக்கமான கவர்ச்சி எல்லாம் காட்டி நடித்தது கிடையாது எமி ஜாக்சன். ஐ மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அவரை கவர்ச்சியாக பார்த்திருக்கலாம்.

இந்த நிலையில் அமெரிக்கா சென்று குழந்தை பெற்று குடும்பமாக வாழ்ந்து வரும் எமி ஜாக்சன் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருவது உண்டு. அந்த வகையில் கருப்பு உடையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்து வருகின்றன.