Connect with us

என் கலரை பார்த்து மணிரத்தினம் சார் சான்ஸ் கொடுக்கலை!.. ஆனந்தராஜ் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு!..

anandharaj maniratnam

Cinema History

என் கலரை பார்த்து மணிரத்தினம் சார் சான்ஸ் கொடுக்கலை!.. ஆனந்தராஜ் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு!..

Social Media Bar

Anandharaj: கோலிவுட் வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் ஆனந்தராஜ். ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான பொழுது அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகமாகவே இருந்தன.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார் ஆனந்தராஜ். ஒரு காலகட்டங்களில் அவர் திரையில் தோன்றினாலே பலருக்கும் பயம் வரும் அளவிற்கு கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் ஆனந்தராஜ்.

சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வர துவங்கிய பிறகு ஆனந்தராஜிற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் வாய்ப்புகளை இழந்தார். பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் பொழுது காமெடி நடிகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஆனந்தராஜ்.

காமெடியனாக களம் இறங்கிய வில்லன்:

அதற்கு முந்தைய தலைமுறையினர்கள் பார்த்து மிரண்டுப்போன ஒரு நடிகரை தற்சமயம் இருக்கும் 2கே கிட்ஸ் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதுதான் நடிகர் ஆனந்தராஜ். இப்படியாக எந்த ஒரு நடிப்பையும் சிறப்பாக நடிக்க கூடியவராக ஆனந்தராஜ் இருந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் மணிரத்தினம் திரைப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோனது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பகல் நிலவு என்கிற திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நண்பன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆனந்தராஜுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நிறத்தால் போன வாய்ப்பு:

அப்போது படத்திற்கு எப்படி எல்லாம் லைட்டிங் வைக்க வேண்டும் என்று மணிரத்தினம் யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் ஆனந்தராஜின் நிறத்தை பார்த்திருக்கிறார். அப்போது முதலே ஆனந்தராஜ் நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பார்.

இதனை பார்த்த மணிரத்தினம் படத்தின் கதாநாயகன் கருப்பாக இருக்கிறார் அவரது நண்பன் வெள்ளையாக இருக்கிறார் நாம் எப்படி லைட் வைத்தாலும் முரளியை விட ஆனந்தராஜ் தானே நன்றாக தெரிவார் என்று கேட்டிருக்கிறார்.

அதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து ஆனந்தராஜை நீக்கிவிட்டனர் அந்த படத்தில் மட்டும் நண்பனாக நடித்திருந்தால் தொடர்ந்து வில்லனாக நடிக்காமல் வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார் ஆனந்தராஜ் ஆனால் அவரது வெள்ளை நிறத்தின் காரணமாக அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது.

To Top