Connect with us

நீயெல்லாம் ஒரு ஆளா? – ஆனந்தராஜை உதாசீனப்படுத்திய ஸ்கூட்டி மேன்..!

Cinema History

நீயெல்லாம் ஒரு ஆளா? – ஆனந்தராஜை உதாசீனப்படுத்திய ஸ்கூட்டி மேன்..!

Social Media Bar

சினிமாவில் நடிகர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரங்கள்தான் அவர்களை பிரபலமாக்குகிறது. மக்கள் ஒரு நடிகருக்கு எந்த வரவேற்பையும் கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது.

இந்த விஷயத்தை ஒரு ஸ்கூட்டி மனிதர் மூலம் அறிந்துள்ளார் நடிகர் ஆனந்த குமார். ஆனந்த குமார் தமிழ் சினிமாவில் வெகு காலமாக வில்லனாக நடித்துவிட்டு தற்சமயம் காமெடியனாக கலக்கி வருகிறார். இவரது காமெடி தற்சமயம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமாவில் விஜயகாந்தோடு நடித்த காலக்கட்டத்தில் ஒருமுறை சென்னையில் ஒரு முக்கிய சாலையில் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் நடிகர்கள் ஓய்வெடுக்க கேரவன் வசதி கிடையாது. எங்காவது ஓரமாக அமர்ந்துதான் ஓய்வெடுப்பார்கள்.

எனவே விஜயகாந்தும் ஆனந்தராஜூம் ஒரு ப்ளாட்பார்மில் அமர்ந்துள்ளனர். அதை பார்த்து அங்கு பெரும் மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அனைவரும் விஜயகாந்தையும் ஆனந்தராஜையும் பார்ப்பதற்கு வந்த கூட்டம். சாலையில் நின்று இருவரும் அனைவருக்கும் கை கொடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மனிதர் ஸ்கூட்டியில் வந்தார். வந்தவர் அனைத்து ஜனங்களையும் விலக்கி கொண்டே வந்தார். சரி விஜயகாந்தைதான் பார்க்க வருகிறார் போல என ஆனந்த ராஜ் நினைத்துள்ளார். ஆனால் அருகில் வந்தவர் “இந்த நடிகர்களுக்கு வேற வேலை இல்ல. நடுரோட்டில் நின்னு ட்ராஃபிக் ஜாம் பண்ணிக்கிட்டு” என திட்டிவிட்டு சென்றுவிட்டார்.

நாம் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் நம் படத்தை பார்க்காதவருக்கு நாம் சாதரண மனிதன்தான் என்பதை அப்போதுதான் புரிந்துக்கொண்டேன் என கூறியுள்ளார் ஆனந்த ராஜ்.

Articles

parle g
madampatty rangaraj
To Top