என் சட்டைக்குள்ள கைய விட்டானுங்க! – ஆண்ட்ரியா கூறிய அதிர்ச்சி தகவல்

தமிழில் பாடகியாக வந்து பிறகு நடிகையாக பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2 மற்றும் 3, வட சென்னை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்சமயம் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் தயாராகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இது மட்டுமின்றி அனல் மேலே பனித்துளி என்கிற ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. இந்த படத்தை இயக்குனர் கைசர் ஆனந்த் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகவில்லை மாறாக ஓ.டி.டியில் இந்த படம் வெளியாகிறது.

பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை கருவாக கொண்டு இந்த கதை தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பேட்டியில் ஆண்ட்ரியா கூறும்போது சிறு வயதில் பேருந்தில் பயணம் செய்யும்போது, ஒரு ஆண் தன்னுடைய சட்டைக்குள் கையை விட்டதாக கூறினார்.

இது போல பல பிரச்சனைகளை அவர் சந்தித்ததாக கூறுகிறார். இந்த விஷயங்களை பேசக்கூடிய திரைப்படமாக அனல் மேலே பனி துளி இருக்கும் என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

Refresh