Tamil Cinema News
நயன்தாரா பத்தி பேசுனா எரிச்சலா இருக்கு.. வெளிப்படையாக பேசிய நடிகை அனிகா..!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்சமயம் பிரபலமான நடிகையாக மாறி இருப்பவர் நடிகை அனிகா சுரேந்தரன். ஆரம்பத்தில் இவர் மலையாள சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டி நடித்து வந்தார்.
மலையாளத்தில் சிறு பெண்ணாக இருக்கும்போதே அவர் நயன் தாராவுக்கு மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து தமிழிலும் அனிகாவிற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால் திரைப்படம் மூலமாக இவர் அறிமுகமானார்.
அதற்கு பிறகு விஸ்வாசம் திரைப்படத்திலும் கூட தொடர்ந்து இவர் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்சமயம் கதாநாயகியாகவும் இவர் சில படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் பேசும்போது சர்ச்சைக்குரிய சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் பேசிய அனிகா கூறும்போது எந்த பேட்டிக்கு சென்றாலும் நயன் தாராவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என கேட்கின்றனர்.
அந்த கேள்வியே கோபத்தை ஏற்படுத்துகிறது. நடிகை நயன்தாரா என்னை விட சீனியர் நடிகை. அவருடன் நடித்த அனுபவம் நல்லப்படியாகதான் இருந்தது. ஆனால் அதையே நானும் எத்தனை பேட்டிகளில்தான் கூறுவது என இதுக்குறித்து பதிலளித்துள்ளார் அனிகா.