தகாத வீடியோக்கள் அனுப்பிய நபர்… நொந்துப்போன பிக்பாஸ் பிரபலம்!..
பிக் பாஸ் நிகழ்ச்சியானது பலருக்குமே ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதில் கலந்து கொண்டவர்களுக்கு நிறைய வரவேற்புகளும் வாய்ப்புகளும் கிடைப்பதை பார்க்க முடியும்.
அப்படியாக பிக் பாஸில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை அனிதா சம்பத். இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார்.
செய்தி வாசிப்பாளராக இருக்கும் பொழுது இவருக்கு நிறைய வரவேற்புகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தொடர்ந்து அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்புகள் கிடைத்தது.
அனிதா சம்பத்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அனிதா சம்பத்தின் மார்க்கெட் என்பது வேற லெவலில் உயர்ந்தது. தொடர்ந்தவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் அனிதா சம்பத்.
சமீப காலமாக அனிதா சம்பத்திற்கு தவறான வீடியோக்களை அனுப்பி ஒரு நபர் டார்ச்சர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அனிதா சம்பத் தற்சமயம் இது குறித்து புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.