ஒரு ஐஸ்க்ரீமுக்காக நான் பட்ட அவதி.. படப்பிடிப்பில் லாரன்ஸ் அதை செய்ய காரணம்..!

lawarance

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து அதன் மூலமாக நடிகராக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸை பொருத்தவரை ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு சின்ன சின்ன வேலைகளை பார்த்து கொடுக்கும் ஒருவராகதான் இருந்து வந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுத்தார். அதன் பிறகு டான்ஸ் மாஸ்டராக நிறைய படங்களில் இருந்து வந்தார்கள் ராகவா லாரன்ஸ். அதை தொடர்ந்து அவருக்கு நடிகராக வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து வரவேற்பை பெற்ற ராகவா லாரன்ஸ் இயக்குனராகவும் மாறினார் முனி, காஞ்சனா மாதிரியான திரைப்படங்களை எல்லாம் ராகவா லாரன்ஸ்தான் இயக்கியிருக்கிறார். அந்த திரைப்படங்கள் அவருக்கு அதிக வரவேற்பையும் கொடுத்திருக்கிறது.

ராகவா லாரன்ஸ் சந்தித்த விஷயம்:

lawarance
lawarance

தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்த அளவிற்கு ராகவா லாரன்ஸ் உயரத்தை பெற்றாலும் கூட சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் நிறைய கஷ்டத்தை அவர் அனுபவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை குறைந்த சம்பளம் வாங்கும் சின்ன சின்ன ஊழியர்களை என்றுமே தமிழ் சினிமா மதித்தது கிடையாது. அதனால் சின்ன இடத்தில் இருந்தபோது விஜயகாந்த் ரஜினிகாந்த் லாரன்ஸ் மாதிரியான பல நடிகர்கள் தமிழ் சினிமாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அப்பொழுது சாப்பாட்டில் ஐஸ்கிரீம் வைக்கப்பட்டது. ஐஸ்கிரீம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே நான் அதற்காக காத்திருந்தேன். எல்லோருக்கும் ஒரு கப் ஐஸ்கிரீம் வைத்து வந்த அந்த நபர் எனது பக்கத்தில் வந்தவுடன் ஒரு ஸ்பூனில் ஐஸ்கிரீமை எடுத்து கொடுத்துவிட்டு சென்றார்.

அப்பொழுது அங்கே ஐஸ்கிரீம் சாப்பிடும் அனைவரையும் நான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் ஒரு முடிவை எடுத்தேன் அதன் பிறகு முனி திரைப்படம் எடுக்கப்பட்ட பொழுது ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு படப்பிடிப்பில் இருக்கும் அனைவருக்கும் ஐஸ்கிரீம் சாப்பிட கொடுப்போம் என்று கூறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.