Tamil Cinema News
யாருமே இதையெல்லாம் செய்ய மாட்டோம்.. தயங்கி தயங்கி போன தேவாவுக்கு சூப்பர் ஸ்டார் செஞ்ச உதவி.!
இசையமைப்பாளர் தேவாவை பொருத்தவரை தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் மற்றும் மெலோடி பாடல்கள் தாண்டி அவர் ஒரு சிறப்பான மெலோடி இசையமைப்பாளர் ஆவார்.
பல திரைப்படங்களில் அவரது மெலோடி பாடல்கள் பெரிய வெற்றியை கொடுத்து இருக்கின்றன. ஆனால் அதனை கேட்கும் பலருக்கும் அது தேவா இசையமைத்த பாடல்கள் என்று தெரியாது. இந்த நிலையில் பெரும்பாலும் இந்த காப்பிரைட் பிரச்சனைகள் என்பது இப்பொழுது தலைவிரித்தாடி கொண்டிருப்பதை பார்க்க முடியும்.
தேவாவுக்கு உதவிய ரஜினி:
ஆனால் அந்த மாதிரியான ஒரு விஷயத்தில் ரஜினிகாந்த் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது குறித்து தேவா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் தேவா கூறும் பொழுது நாங்கள் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டோம்.
ந்த இசை நிகழ்ச்சிக்கு பாட்ஷா இசை நிகழ்ச்சி என்று பெயர் வைத்து போஸ்டரிலும் பாட்ஷா படத்தை பயன்படுத்தி இருந்தனர். ஆனால் அவர்கள் ரஜினிகாந்திடம் இது குறித்து ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எனவே நான் அந்த போஸ்டரை எடுத்துக் கொண்டு ரஜினிகாந்தை பார்ப்பதற்கு சென்றிருந்தேன்.
பிறகு ரஜினிகாந்திடம் பேசிய பிறகு நீங்கள் என்னுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்தால் பப்ளிசிட்டிக்கு உதவும் என்று கூறினேன் அவரும் அவ்வாறு செய்தார். அதற்கு பிறகு என்னிடம் நான் மட்டும் தனியாக இந்த போஸ்டர் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அதை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் நன்றாக இருக்கும் என்று கூறினார் இப்படியான மனதை எல்லாம் யாருக்கு வரும் என்று கூறியிருக்கிறார் தேவா.