Hollywood Cinema news
அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!
தற்சமயம் தொடர்ந்து அமெரிக்காவில் பீதியை ஏற்படுத்தி வரும் ஒரு விஷயமாக அனபெல் என்கிற பொம்மை இருந்து வருகிறது. 1930 களில் வாழ்ந்த வாரன் தம்பதியினர் என்கிற கணவன் மனைவி இருவரும் இணைந்து நிறைய மாந்திரீக விஷயங்களை கண்டறிந்து வந்தனர்.
அப்பொழுது அவர்கள் சேகரித்த விஷயங்களில் இந்த அனபெல் என்கிற பொம்மையும் ஒன்று. அனபெல் என்கிற ஒரு சிறுமியின் ஆத்மா இந்த பொம்மையில் இருப்பதாக கூறி அப்பொழுது இதை ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்து மூடி வைத்துவிட்டனர்.
இந்த நிலையில் தற்சமயம் அந்த பொம்மையை எடுத்து ஊர் ஊராக சென்று கண்காட்சி காட்டி வருகிறது ஒரு நிறுவனம். தொடர்ந்து சமீபத்தில் ஒரு கிராமத்தில் திடீரென அனபெல் பொம்மை காணாமல் போன நிகழ்வு நடந்தது.
இந்த நிலையில் தற்சமயம் அனாபெல் பொம்மையை பார்த்து வந்த dan rivera என்கிற புலனாய்வு நிபுணர் மரணம் அடைந்திருப்பது பலருக்கும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. மர்ம புலனாய்வாளரான dan rivera அனபெல் பொம்மையை கவனித்துக் கொள்ளும் வேலையை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் திடீரென்று ஒரு நாள் மர்மமான முறையில் தன்னுடைய அறையில் இறந்து கிடந்துள்ளார் dan rivera. இதனை தொடர்ந்து அனபெல் பொம்மை குறித்த பயம் இன்னும் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.
