News
கும்புடு போடுறது எல்லாம் அஜித்துக்கு…ஓப்பன் டாக் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்.!
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் ஒரு தனித்துவமான நடிகராக அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு சினிமாவில் நடித்து அதிக காசு சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் பெரிய இலக்காக இருக்கும்.
அதே போல தங்களுடைய பிரபலத்தை தக்க வைத்து கொள்வதற்காக ரசிகர்களை சந்திப்பது அவர்களுக்கு விழா நடத்துவது போன்றவற்றை பெரிய நடிகர்கள் செய்வார்கள். ஆனால் இது எதையுமே செய்யாமல் அஜித் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.
தொடர்ந்து அவரது படங்கள் வெளியாவது கூட கிடையாது. இருந்தாலும் அஜித்திற்கான ரசிகர் கூட்டம் என்பது குறைவதே இல்லை. மேலும் அஜித் நிறைய மக்களுக்கு நன்மைகள் செய்துள்ளார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் உண்டு.
அஜித்தின் கேரக்டர்:
அதேபோல பல திறமைகளை கையில் கொண்டவராக அஜித் இருந்து வருகிறார். இதையெல்லாம் தாண்டி அஜித்தின் குணங்கள் என்று சினிமா துறையில் உள்ளவர்கள் பலரே பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.
அதிகபட்சம் அஜித்தை பற்றி நல்லவிதமாகதான் அவர்கள் கூறுவார்கள் அப்படியாக கே.எஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அஜித் படத்தை பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது சினிமா துறையில் அஜித்தும் ஏ.ஆர் ரகுமானும் மட்டும் தனித்துவமானவர்கள். ஏனெனில் எந்த ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்கள் சமமாகதான் பார்ப்பார்கள். கும்பிடு போடுவது எழுந்து நிற்பது போன்ற எந்த ஒரு விஷயத்தையும் இவர்கள் இருவரும் செய்ய மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.
