Connect with us

ஒரு மனுசனை இப்படிதான்னு அடையாளம் குத்த கூடாது!.. தேவாவின் அடையாளத்தை மாற்றிய ஏ.ஆர் ரகுமான்!..

ar rahman deva

News

ஒரு மனுசனை இப்படிதான்னு அடையாளம் குத்த கூடாது!.. தேவாவின் அடையாளத்தை மாற்றிய ஏ.ஆர் ரகுமான்!..

Social Media Bar

Music Director Deva and AR Rahman : தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் எப்போதுமே வரவேற்பை பெற்ற ஒருவராக இசையமைப்பாளர் தேவா இருக்கிறார். தேவா இசையமைக்கும் படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

அதில் பாட்ஷா, நினைத்தேன் வந்தாய் என பல படங்களை கூறலாம் அவை அனைத்தும் அப்போதைய காலகட்டத்தில் வெளிவந்து பெரும் ஹிட் கொடுத்த பாடல்களை கொண்ட திரைப்படங்கள் ஆகும். அதிலும் பாட்ஷா திரைப்படத்தில் தேவா இசை அமைத்த பின்னணி இசைதான் அந்த படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே தேவா ஒரு கானா பாடகராகதான் அறியப்பட்டார். அவருடைய பாடல்களில் அதிகமாக பிரபலமானது கானா பாடல்கள்தான். ஆனால் எல்லா விதமான பாடல்களுக்கும் இசையமைக்கும் திறன் பெற்றவர் தேவா.

music director deva
music director deva

தேவா இசையமைத்த பல மெலோடி பாடல்களும் பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன என்றாலும் அதைக் கேட்கும் பலருக்கும் அது தேவாதான் இசையமைத்த பாடல் என்பது தெரியாமல் இருக்கிறது. ஏனெனில் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவரை கானா இசையமைப்பாளராக கூறியதே அதற்கு காரணமாகும்.

அதேபோல அவரும் பாடிய பாடல்கள் எல்லாமே கானா பாடல்களாகதான் பாடினார். ஆனால் மெலோடியிலும் தேவாவால் கலக்க முடியும் என்பதை மிக தாமதமாக தமிழ் சினிமாவிற்கு எடுத்துக்காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.

ar-rahman
ar-rahman

தற்சமயம் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் பாடல்களுக்கு தேவா பாடி வருகிறார். அப்படியாக அவர் மாமன்னன் திரைப்படத்தில் நெஞ்சமே நெஞ்சமே என பாடிய பாடல் பெரும் வெற்றியை கொடுத்தது. இப்படி ஒரு மெலோடி பாடலை தேவாவால் பாட முடியுமா என்ற அனைவரும் அசந்து போனார்கள்.

அதேபோல தற்சமயம் லால் சலாம் திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் அவர் பாடியிருக்கும் அன்பாளனே என்னும் பாடல் மனதை உருக்கும் பாடலாக அமைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இனி தேவாவுக்கு தொடர்ந்து மெலோடி பாடல்களை பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. இப்படி தேவாவின் அடையாளத்தை மாற்றி அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.

To Top