தற்சமயம் மக்களால் அதிகம் பேசப்பட்டு வரும் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் திரைப்படம்.
இந்த திரைப்படம் வடசென்னை படத்தின் கதையோடு தொடர்புடைய கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் வட சென்னை 2 திரைப்படத்தில் சிம்பு மற்றும் தனுஷ் சேர்ந்து நடிக்கவும் வாய்ப்புகள் உண்டு என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் அரசன் திரைப்படத்திற்காக ப்ரோமோ வீடியோ ஒன்றை உருவாக்கி இருந்தனர். ஆனால் அந்த வீடியோ எப்பொழுது வெளியாகும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த ப்ரோமோவை இன்று சில திரையரங்குகளில் வெளியிடலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றனர்.
ட்ரெய்லர், ப்ரோமோ மாதிரியான விஷயங்கள் இதே மாதிரி இதற்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆனால் இப்பொழுது வித்தியாசம் என்னவென்றால் இந்த ப்ரோமோவிற்கு கட்டணமாக திரையரங்குகளில் 15 ரூபாய் வசூல் செய்யலாம் என்று திட்டமிட்டு இருக்கின்றார்களாம்.
இது மட்டும் சக்சஸ் ஆகிவிட்டது என்றால் அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களின் ப்ரோமாக்களை இப்படி திரையரங்குகளில் குறைந்த கட்டணத்திற்கு வெளியிடலாம் என்பது சினிமா வட்டாரத்தில் ஒரு திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.