Connect with us

உன் கள்ளகாதல் விவகாரம் எல்லாம் இங்க வேண்டாம்.. அர்னவை எச்சரித்த போட்டியாளர்கள்.!

News

உன் கள்ளகாதல் விவகாரம் எல்லாம் இங்க வேண்டாம்.. அர்னவை எச்சரித்த போட்டியாளர்கள்.!

Social Media Bar

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்சமயம் அர்னவ் மற்றும் அன்ஷிதா இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் விஷயங்கள் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.அர்னவும் அன்ஷிதாவும் பிக்பாஸிற்கு வெளியில் இருந்த பொழுது தொடர்பில் இருந்ததாக ஒரு பேச்சு உண்டு.

இருந்தாலும் அந்த விஷயம் தெரியாத அளவிற்குதான் அவர்கள் பிக் பாஸில் விளையாடி வந்தனர். உண்மையில் இருவரும் விரோதி போலதான் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வந்தனர்.

ஆனால் போகப் போக அவர்களது செயல்பாடுகளில் மாற்றங்கள் தென்படுகின்றன. உதாரணத்திற்கு சமீபத்தில் சில நாட்கள் முன்பு சுடுதண்ணீர் வேண்டுமென்று அன்ஷிதா அர்ணவிடம் கேட்ட பொழுது அருணவ் உடனே சுடுதண்ணீர் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

அர்ணவ் செய்த வேலை:

ஆனால் ஆண்கள் வீட்டிற்குள் எந்த ஒரு காரியம் ஆக வேண்டும் என்றாலும் அதை பெண்கள்தான் வந்து செய்ய வேண்டும் அதற்கு அவர்கள் ஒரு டாஸ்க் செய்து காட்டிவிட்டு தான் செய்ய வேண்டும் என்பது ஆண்கள் அணியினர் வைத்திருக்கும் விதிமுறை.

அதனை உடைத்து அருண் அன்சிதாவிற்கு சுடுநீரை கொடுத்திருக்கிறார் இதனை கண்டுபிடித்த மற்ற ஆண் போட்டியாளர்கள் அர்ணவை அழைத்து எதற்காக தண்ணீர் கொடுத்தாய் என்று கேட்ட பொழுது அவர் முதலில் அன்சிதாவிற்கு தண்ணீர் கொடுத்ததை மறைத்திருக்கிறார்.

பிறகு மனிதாபிமான அடிப்படையில் கொடுத்ததாக கூறினார் இதனை அடுத்து பிக் பாஸ் போட்டியாளர்கள் இனி இந்த மாதிரி தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று அருணவிற்கு வார்னிங் கொடுத்து இருக்கின்றனர்.

To Top