உலகத்துல யாருமே பண்ணாததை என் மாப்பிளை படத்துக்காக செய்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த அருண் பாண்டியன்!.

Arun Pandiyan : சமீபத்தில் தமிழில் பிரபலமாகி வரும் நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இது ஏதோ திடீரென காதல் ஏற்பட்டு உருவான திருமணம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை என்று தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் அருண் பாண்டியன். அதாவது அருண் பாண்டியனுக்கு அசோக் செல்வனை 15 வருடமாகவே தெரிந்திருக்கிறது.

அந்த பழக்கத்தில்தான் அவரது மகளுடன் அசோக் செல்வனுக்கு பழக்கமாகி இருக்கிறது. பிறகு அதுவே காதலாகி இருக்கிறது வெகு காலங்களாக அதை வெளியில் தெரியாமல் அவர்கள் பார்த்துக் கொண்டதால் திடீரென காதலித்து திருமணம் செய்து கொண்டதாக பலரும் நினைத்துள்ளனர்.

Social Media Bar

இது குறித்து அருண்பாண்டியன் கூறும் பொழுது 15 வருடத்திற்கு முன்பு அவர் நடித்த முதல் திரைப்படமான சூது கவ்வும் திரைப்படத்தின் அகில உலக உரிமத்தை நான்தான் பெற்றேன். அந்த திரைப்படத்தின் பிரிவியூ காட்சியை பார்த்தவுடனே அது சிறப்பாக வரும் என்று முடிவு செய்து நான் வாங்கினேன்.

எனக்கு முன்பு இதுவரை எந்த ஒரு நபரும் இப்படி ஒரு படத்தை வாங்கியது கிடையாது. அதேபோல அவர் நடித்த சவாலே சமாளி என்கிற திரைப்படத்தை நான் தான் தயாரித்தேன். இப்படியாக எங்களுக்குள் பழக்கம் இருந்து கொண்டு தான் இருந்தது.

ஒரு கட்டத்தில் அவரே எனக்கு மாப்பிள்ளையாகவும் ஆகிவிட்டார் என்று கூறியிருக்கிறார் அருண் பாண்டியன். அசோக்செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.