Connect with us

ரஜினி சாரோட முடிவு அது!.. காபியடிச்சி படம் பண்ணிட்டு இப்படி பேசலாமா!.. சுந்தர் சியை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்!..

rajini sundar c

News

ரஜினி சாரோட முடிவு அது!.. காபியடிச்சி படம் பண்ணிட்டு இப்படி பேசலாமா!.. சுந்தர் சியை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்!..

Social Media Bar

ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான முக்கால்வாசி திரைப்படங்கள் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஆகும். அந்த வகையில் சில குறிப்பிட்ட திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்களாக ரஜினிகாந்திற்கு இருக்கின்றன.

அதில் ஒரு முக்கியமான திரைப்படம் அருணாச்சலம். பொதுவாக பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றுதான் படங்களில் கதை இருக்கும் ஆனால் அருணாச்சலம் திரைப்படத்தில் பணத்தை செலவு செய்வது எப்படி என்பதாக கதை இருக்கும்.

இந்த திரைப்படத்திற்கான கதை குறித்து பேசுவதற்காக ரஜினி அழைத்த பொழுது பஞ்சு அருணாச்சலம் சுந்தர் சி க்கு ஒரு எச்சரிக்கை கொடுத்து இருந்தார். அதாவது ரஜினியின் மனநிலைக்கு ஏற்ற மாதிரியான ஆட்களை தான் அவர் படங்களில் வைத்துக் கொள்வார் அதற்கு எதிர் மனநிலை கொண்டவர்களை அவர் படத்தில் இருந்து எடுத்து விடுவார் எனவே பார்த்து பேசுங்கள் என்று கூறி அனுப்பி உள்ளார்.

அங்கு சென்ற சுந்தர் சியிடம் ரஜினி அருணாச்சலம் படத்தின் கதையை கூறியுள்ளார். முதலில் அந்த கதையை கேட்டபோது சுந்தர்சிக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் அதை பிடிக்கவில்லை என்று ரஜினியிடம் கூறிவிட்டால் அவர் வாய்ப்பு தர மாட்டார் என்று எண்ணிய சுந்தர் சி கதை நன்றாக இருக்கிறது சார் என்று கூறி படத்தை இயக்க துவங்கினாராம்.

இதை அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறி இருந்தார் சுந்தர் சி இதற்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள் படத்தைக் குறித்து முக்கியமான ஒரு விஷயத்தை கூறியுள்ளனர். அதாவது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் காபிதான் இந்த அருணாச்சலம் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. Brewster’s Millions என்று 1985 வந்த படத்தைதான் தமிழில் அருணாச்சலம் என்று படமாக்கி இருக்கிறார் சுந்தர் சி.

கிட்டதட்ட அதில் ரஜினியின் அப்பா சொல்லும் சிகரெட் கதையில் துவங்கி ரஜினி அரசியலுக்கு வருவது கிளைமாக்ஸ் கட்சியில் ரம்பாவிற்கு சம்பளமாக தொகையை கொடுத்து 30 கோடியையும் செலவு செய்வது என அனைத்து காட்சிகளும் அந்த படத்தில் இருந்து தூக்கப்பட்டவை இந்த நிலையில் இப்படி எல்லாம் கதை விடலாமா என்று சுந்தர் சியை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

To Top