ஒரே ஸ்க்ரீன்ல ரெண்டு படம் ஆசிய வரலாற்றிலேயே முதல் முறை? – பெரும் இயக்குனர்களையே அதிர வைத்த தமிழ் படம்!

உலக அளவில் பல நாடுகளில் பல படங்கள் புது விதமான திரைப்படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளன. அதே போல தமிழ் சினிமாவிலும் அதற்கு நிகரான சில சாதனைகளை செய்துள்ளனர்.

Social Media Bar

குறைவான நாட்களில் திரைப்படம் எடுப்பது, சிங்கிள் ஷாட் படங்கள் என அந்த வரிசை நீளும். அதில் முக்கியமானதொரு படமாய் இணைந்திருக்கும் திரைப்படம்தான் பிகினிங்.

பிகினிங் ஒரு தமிழ் திரைப்படமாகும். ஜகன் விஜயா என்னும் இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிக்கலான திரைக்கதையை கமெர்ஷியலாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் இரண்டு வெவ்வேறு கதைகள் திரையின் இரு பகுதிகளிலும் ஓடுமாம். அதாவது திரையை இரண்டாக பிரித்து ஒரே நேரத்தில் இரண்டு கதைகளை ஒளிப்பரப்புகின்றனர். அப்படியென்றால் இரண்டிலும் ஒலி கேட்குமா? என்றால் அப்படி இல்லையாம்.

ஒரு படத்தில் ஒலி வரும்போது மற்றொரு படத்தில் ஒலி இல்லாத காட்சிகள் போய்க்கொண்டிருக்குமாம். இறுதியில் இரு கதைகளும் ஒரே இடத்தில் சந்திப்பது போல படம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழின் பெரும் பெரும் இயக்குனர்களே இந்த படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். தற்சமயம் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் சங்கர் போன்றோரும் அந்த படத்தை பார்க்க இருக்கிறார்களாம். விரைவில் இந்த படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தின் ட்ரைலரை காண க்ளிக் செய்யவும்.