Tamil Cinema News
அப்படி கூப்பிட்டு தவறு பண்றாங்க.. கஷ்டமா இருக்கு.. மனம் வருந்திய பலூன் அக்கா.!
சமூக வலைத்தளங்களில் இந்த அக்காக்கள் எல்லாம் இப்போது அதிகமாக பிரபலமடைந்து வருகின்றனர். டெயிலர் அக்கா, பலூன் அக்கா என பல அக்காக்கள் இப்போது வலம் வந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை கொண்டு நன்றாக பணம் சம்பாதித்தும் வருகின்றனர். அப்படி பணம் சம்பாதிக்கும் அக்காக்களில் பலூன் அக்கா எனப்படும் ஆரூரா சிங்களர் மிக முக்கியமானவர்.
இவர் மாதத்திற்கே லட்சங்களுக்கு மேல் பணம் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் அவருக்கு பலூன் அக்கா என்கிற பட்டத்தை பெற்று தந்தது.
இந்த நிலையில் அவர் பேட்டியில் கூறும்போது அக்கா என்பது சகோதரியை குறிக்கும் ஒரு வார்த்தை. என்னை அக்கா என்று அழைத்துவிட்டு தவறான கமெண்ட் செய்கின்றனர்.
அவர்கள் அக்காவிடம் அப்படிதான் பேசுவார்களா? அதுதான் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார் பலூன் அக்கா.
