Connect with us

துபாயில் பதம் பார்க்கப்பட்ட நடிகைகள்!.. நடிகர்கள் செஞ்ச அக்கிரமம்!.. பயில்வான் ஓப்பன் டாக்!.

bailvan ranganthan

Tamil Cinema News

துபாயில் பதம் பார்க்கப்பட்ட நடிகைகள்!.. நடிகர்கள் செஞ்ச அக்கிரமம்!.. பயில்வான் ஓப்பன் டாக்!.

Social Media Bar

தற்பொழுது கோலிவுட் வட்டாரங்களை அதிர செய்யும் அளவிற்கு ஒரு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளதாவது, கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பிரபல நடிகைகள் உட்பட பல இளம் பெண்களை அழைத்துச் சென்று துபாயில் நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக 3புரோக்கர்களை போலீசார் கைது செய்து உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த பிரச்சனையில் பிரபல நடிகை ஒருவர் தலைமையில் தான் நடந்திருப்பதாகவும், இங்குள்ள நடிகர்கள், பிரபல அரசியல் பிரமுகர்கள் துபாய் சென்று இதில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எத்தனையோ நடிகை, நடிகைகள் வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் வாய்ப்பிற்காக பலரும் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம் பெண்களின் வாழ்க்கையை இது போன்ற நபர்கள் அவர்களின் பண தேவைக்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

சிக்கலில் சிக்கிய குறும்பட டைரக்டர்கள்

சினிமாவில் சில நிமிடங்கள் மட்டுமே வரும் நடிகைகள், படத்திற்காக வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் அப்பாவி பெண்கள் உட்பட பலரை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் துபாய்க்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் தமிழக போலீசுக்கு தேசிய புலனாய்வு முகமை மூலம் புகார் வந்திருக்கிறது. துபாயில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் டான்ஸ் கலைஞர்களான இளம் பெண்களை அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் சென்னையிலிருந்து அழைத்துச் சென்ற நபர்கள் மீது புகார் எடுக்கும்படி தகவல் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் அருண், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் விசாரணையில் குறும்பட டைரக்டர்கள் மூலம் ஸ்டார் ஹோட்டல்களில் டான்ஸ் நிகழ்ச்சி என்ற அக்ரீமெண்ட் முறையில் பல நடிகைகள் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

இதில் சினிமா நடிகைகள் பலர் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து அவர்களை மிரட்டி அவர்களின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ஆகிவற்றை பறித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

baiyilvan

இந்த இந்த சம்பவம் தற்போது கேரளாவை சேர்ந்த ஒரு டான்ஸ் கலைஞர் மூலமாக தெரிய வந்திருக்கிறது. அவர் சென்னை போலீசாரிடம் புகார் அளித்தும், வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். இதனை அடுத்து குறும்பட இயக்குனர்களான மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், தென்காசியை சேர்ந்த ஜெயக்குமார், துரைப்பாக்கம் சேர்ந்த ஆபியா ஆகியோரை போலீசார் கைது செய்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.

இவர்கள் சோசியல் மீடியா மூலம் துபாயில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு ஆட்கள் தேவைப்படுவதாக சொல்லி பல நடிகை, டான்ஸ் கலைஞர்களை துபாய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார். துபாயில் நட்சத்திர ஓட்டலில் பாலியல் தொழில் செய்து வரும் கேரளாவை சேர்ந்த ஷகீல் என்பவர் 6 மாத ஒப்பந்தத்தில், சீரியல் நடிகை முதல் துணை நடிகைகள் வரை 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை அட்வான்ஸ் கொடுத்து துபாய் வர வைத்து இருக்கிறார்.

துபாய் சென்றதும் அவர்களை வரவேற்று நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து அவர்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் பறித்து விடுகிறார்.

பின்னணியில் பிரபல நடிகை

இதுபோன்ற நடிகை மற்றும் இளம் பெண்களை துபாய்க்கு அனுப்பி வைக்க புரோக்கராக இங்கு ஒரு நடிகை செயல்பட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதன் காரணமாக பாலியல் புரோக்கர் ஷகீல் அலைபேசியை ஆராய்ந்த பொழுது அவர் அனைத்து விடயங்களையும் அழித்து விட்டதாகவும், இதற்காக அதிகாரிகள் அதனை தடவியல் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவரது செல்போனை ஆராய்ந்தால் யார் அந்த நடிகை என்பது தெரியவரும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் பயல்வான் ரங்கநாதன் கூறும்பொழுது, இது போன்ற விளம்பரங்களை பார்த்து படிப்பு தேவையில்லை, ஐம்பதாயிரம் சம்பளம் என்று கூறினால் அதனை யாரும் நம்ப வேண்டாம்.அவர்கள் உங்கள் உடலுக்காக மட்டும் தான் அவ்வாறு செய்வார்கள். மேலும் அந்த படத்தை ப்ளூ படமாகவும் வெளியிடுவார்கள். எனவே அவ்வாறு நம்பி செல்லாதீர்கள் என அவர் தெரிவித்திருக்கிறார்.

Continue Reading
Advertisement
You may also like...
To Top