News
அஜித், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்! – பீஸ்ட் வசூல்!
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் முன்பதிவிலேயே அஜித், சூர்யா படங்களை பின்னுக்கு தள்ளியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதற்காக ஒரு வாரம் முன்னரே முன்பதிவு செய்த ரசிகர்கள் தியேட்டர்கள்தோறும் ப்ளெக்ஸ், பேனர்கள் வைத்து கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தை தாண்டி விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ள மாநிலம் கேரளா. கேரளாவிலும் பீஸ்ட் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. இதுவரை கேரளாவில் மட்டும் பீஸ்ட் படத்திற்கான முன்பதிவில் மட்டும் ரூ.4 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக கேரளாவில் வெளியான அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் மொத்தமாகவே ரூ.4 கோடிக்குள் வசூல் செய்திருந்த நிலையில் முன்பதிவிலேயே பீஸ்ட் இந்த சாதனையை முறியடித்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
