Connect with us

அஜித் தாவுனா ஒத்துக்குறீங்க.. இதுக்கு என்ன குறைச்சல்? – ட்ரோலான பீஸ்ட் ஜம்ப்புக்கு பதில்!

Beast Vs Valimai

News

அஜித் தாவுனா ஒத்துக்குறீங்க.. இதுக்கு என்ன குறைச்சல்? – ட்ரோலான பீஸ்ட் ஜம்ப்புக்கு பதில்!

Social Media Bar

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ப்ரோமில் வந்த தாவும் காட்சி கிண்டலுக்குள்ளான நிலையில் விஜய் ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.

Beast Vs Valimai
Beast Vs Valimai

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வருகிறது.

அப்படியாக சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் விஜய் மாடி கைப்பிடி கட்டையை மிதித்து சுமார் 7 அடி உயரம் தாவி மாடி மேல் நிற்கும் ஒருவரை பாட்டிலால் அடிப்பார். இந்த காட்சி ரசிகர்களை சிலிர்க்க செய்த நிலையில் அந்த காட்சி குறித்து சிலாகித்து பேசி வந்தனர்.

Beast Movie Scene

பொதுவாக அஜித், விஜய் படங்களில் ஏதாவது ஒன்று வெளியாகும்போது மற்றொருவரின் ரசிகர்கள் அதை கலாய்ப்பது, கேள்வி கேட்பதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் விஜய் தாவி சென்ற இந்த காட்சி குறித்து சோசியல் மீடியாக்களில் “ஒருவர் 7 அடி உயரத்திற்கு மேல் தாவ முடியுமா?” என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

Valimai Movie Scene

இதற்கு பதிலளித்து சோசியல் மீடியாவில் வாக்குவாதத்தை தொடங்கிய விஜய் ரசிகர்கள் அஜித் வலிமை படத்தில் பைக்கில் கட்டிடம் விட்டு கட்டிடம் தாண்டும் காட்சியை சுட்டிக்காட்டி “இப்படியெல்லாம் தாவுறதை ஒத்துக்குறீங்க.. 7 அடி தாவியது இதைவிட பெரிய விஷயமா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அஜித் – விஜய் ரசிகர்களின் இந்த விவாதம் சோசியல் மீடியாவை கலகலப்பாக்கியுள்ளது.

அஜித், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்! – பீஸ்ட் வசூல்!

அஜித்தின் அடுத்த படம் மணிஹெய்ஸ்ட் ரக கதையா?

Continue Reading
Advertisement
You may also like...
To Top