அஜித்தின் அடுத்த படம் மணிஹெய்ஸ்ட் ரக கதையா?

AK61

அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே61 திரைப்படம் மணிஹெய்ஸ்ட் போன்ற பேங்க் கொள்ளை கதை என பேசிக் கொள்ளப்படுகிறது.

AK61
AjithKumar

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து சமீபத்தில் வெளியான படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரசிகர்களை தீவிரமாக காக்க வைத்து வெளியான இந்த படம் பெரும் வசூலை குவித்து வெற்றிப் பெற்றது.

அதை தொடர்ந்து மீண்டும் அஜித் – ஹெச்.வினோத் கூட்டணியில் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 61வது படமான இதற்கு தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் ஏகே61 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் எந்த மாதிரியான கதை என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்து வருகிறது.

ன்று முதல் ஏகே61 படப்பிடிப்பு? தீபாவளிக்கு ரிலீஸ்? 

அதன்படி இந்த படம் மணிஹெய்ஸ்ட் வெப்சிரிஸ் போல பேங்க் கொள்ளையை மையமாக கொண்ட கதை என பேசிக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா கூட இப்படியான கதைதான்.

அதில் அஜித் ஆண்ட்டி ஹீரோ ரோலில் கலக்கி இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் அஜித் மங்காத்தா போன்ற ஆண்ட்டி ஹீரோ ரோலை ஏற்க உள்ளாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து அஜித் ஆண்ட்டி ஹீரோ ரோலில் நடித்தால் அது பெரிதும் பேசப்படும் என்பதால் ரசிகர்கள் இந்த தகவல் உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆவலுடன் உள்ளனர்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh