News
இன்று முதல் ஏகே61 படப்பிடிப்பு? தீபாவளிக்கு ரிலீஸ்? – வெளியான பரபரப்பு தகவல்!
வலிமையை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படமான ஏகே61 படத்தின் படப்பிடிப்புகள் இன்று தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து சமீபத்தில் வெளியான படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரசிகர்களை தீவிரமாக காக்க வைத்து வெளியான இந்த படம் பெரும் வசூலை குவித்து வெற்றிப் பெற்றது.
அதை தொடர்ந்து மீண்டும் அஜித் – ஹெச்.வினோத் கூட்டணியில் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 61வது படமான இதற்கு தலைப்பு அறிவிக்கப்படாத நிலையில் ஏகே61 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல் கசிந்துள்ளது. இடைவிடாது அடுத்த 2 மாதங்களுக்கு முழுமையாக படப்பிடிப்பை நடத்தி தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம்தான் அஜித்தின் வலிமை வெளியான நிலையில் அடுத்து தீபாவளிக்கும் அஜித் படம் வெளியானால் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரே ஆண்டில் இரண்டு அஜித் படங்கள் வெளியானதாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
