Latest News
ரிலீஸ் ஆகும் முன்னரே வலிமையை முந்திய பீஸ்ட்!
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் ரிலீஸுக்கு முன்னரே வலிமை சாதனையை முறியடித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் 800+ திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் புக்கிங் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஓவர்சீஸில் இங்கிலாந்தில் முன்பதிவில் மட்டும் பீஸ்ட் 1.41 லட்சம் யூரோக்களை வசூலித்துள்ளது. முன்னதாக வெளியான அஜித்தின் வலிமை மொத்தமாக இங்கிலாந்தில் 1.40 லட்சம் யூரோக்களை வசூலித்தது. இந்நிலையில் முன்பதிவிலேயே இந்த சாதனையை பீஸ்ட் முறியடித்துள்ள நிலையில் வரும் வாரங்களில் வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி எப்போ தலைவர் ஆவார்? குடைந்த நெல்சன்! – எஸ்கேப் ஆன விஜய்!