News
ஜூராசிக் வேல்டின் புது போஸ்டர்கள் – மறுபுடியும் நீங்களா?
புதிதாக வரவிருக்கும் ஜூராசிக் வேல்ட் டொமினியன் திரைப்படத்தின் புது கவர் போட்டாக்கள் வெளியாகியுள்ளன.
டைனோசர்களை பிரமாண்டமாக காட்டி 1993 லேயே சக்கை போடு போட்ட திரைப்படம்தான் ஜூராசிக் பார்க். இந்த திரைப்படத்திற்கு பிறகு ஹாலிவுட்டில் பல டைனோசர்கள் திரைப்படங்கள் வந்துவிட்டன.

2015 இல் வந்த ஜூராசிக் வேல்ட் திரைப்படமும் பழைய ஜூராசிக் பார்க் திரைப்படம் போலவே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. அதன் மூன்றாம் பாகமான ஜூராசிக் வேல்ட் டொமினியன் வரும் ஜூன் 10 அன்று வெளியாக உள்ளது.
ஜூராசிக் பார்க் முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்த ஜெஃப் கோல்டுப்ளம், சாம் நெய்ல், லாரா டெர்ன் ஆகிய மூவரும் இந்த படத்தில் வருவதால் ரசிகர்கள் இந்த படத்திற்காக பல்வேறு எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜூராசிக் வேல்ட் டொமினியனின் இரண்டு போஸ்டர்களை எம்பையர் என்கிற இதழ் வெளியிட்டுள்ளது. அதில் பழைய ஜூராசிக் பார்க்கில் நடித்த மூவரும் உள்ள போஸ்டர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் 80ஸ், 90ஸ், 2K என அனைவரும் ஜூராசிக் பார்க் டொமினியன் படத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர்.
