நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் – சிம்புவின் அடுத்த பட காட்சிகள் ரிலீஸ்

சிம்பு அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நடிகர் சிம்பு நடித்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம், தமிழ் சினிமாவில் மிகவும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிம்பு ரசிகர்களும் பொது மக்களும் கூட நடிகர் சிம்புவின் திரைப்படங்களின் மேல் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

அதற்கு தகுந்தாற் போல ஜி.வி மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து அடுத்து வரவிருக்கும் வெந்து தனிந்தது காடு திரைப்படமும் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை அல்லாமல் சிம்பு புதிதாக நடிக்கும் ஒரு படத்தின் காட்சியானது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இந்த வீடியோவில் சிம்பு ஆட்டோ ட்ரைவர் உடையில் உள்ளார். கைக்குட்டையை கொண்டு முகத்தை மூடிக்கொண்டு ஆட்டோவில் படுத்திருப்பதாக அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

எனவே சிம்பு அடுத்த திரைப்படத்தில் ஆட்டோக்காரராக நடிக்கிறார் என உறுதி செய்த ரசிகர்கள் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh