News
வேற லெவல் பண்ண போகுது.. கேஜிஎஃப் மூன்றாவது சிங்கிள்!
கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ரிலீஸாக உள்ள நிலையில் அதன் மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

யஷ் நடித்து பிரசாந்த் நீல் இயக்கி கடந்த 2018ல் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் கேஜிஎஃப். இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் வெகுவாக எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் சாப்ட்டர் 2 வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவுகள் இப்போதே ஃபுல்லாகி உள்ளது.

முன்னதாக கேஜிஎஃப் சாப்ட்டர் 2வின் டூஃபான் மற்றும் அகிலம் நீ ஆகிய பாடல்கள் வெளியாகி செம ட்ரெண்டாகியுள்ளது. தற்போது படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளை காலை 11.03மணிக்கு சுல்தானா என்ற மூன்றாவது சிங்கிள் அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. இது ரசிகர்களை கொண்டாட்ட மனநிலையில் தள்ளியுள்ளது.
அஜித் தாவுனா ஒத்துக்குறீங்க.. இதுக்கு என்ன குறைச்சல்?
