News
திரை தீ பிடிக்கும் போல..! பீஸ்ட் டிக்கெட்டுக்கு பெட்ரோல் இலவசம்!
நாளை விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் நிலையில் அந்த படத்திற்கான டிக்கெட் வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்ற விளம்பரம் வைரலாகியுள்ளது.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் 800+ திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக ரசிகர்கள் ப்ளெக்ஸ், பேனர்கள் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பீஸ்ட் டிக்கெட் வாங்கினால் பெட்ரோல் இலவசம் என்ற விளம்பரம் வைரலாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் ஷோவிற்கு 5 டிக்கெட்டுகள் வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என விஜய் ரசிகர் ஒருவர் ப்ளெக்ஸ் வைத்து விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரம் குறித்த புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.
அஜித், சூர்யாவை பின்னுக்கு தள்ளிய விஜய்! – பீஸ்ட் வசூல்!
