40 நாளெல்லாம் தாங்காது.. நடிகை கஜோலால் உடல் வலி வந்து ஓடிய நடிகர்!.

பாலிவுட்டில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் அஜய் தேவகன் கஜோல் தம்பதிகள் முக்கியமானவர்கள்.

தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவராக நடிகர் அஜய் தேவகன் இருந்து வருகிறார்.

சமீபத்தில் கூட அஜய் தேவ்கன் நடிப்பில் வெளிவந்த மைதான் திரைப்படம் இந்திய அளவில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. இத்தனைக்கும் வகுடு எடுத்து சீவி கோர்ட் மாட்டிக் கொண்டு வரும் ஒரு கதாபாத்திரமாகதான் அதில் அஜய் தேவகன் நடித்திருந்தார்.

ஹனிமூனில் சம்பவம்:

அஜய் தேவகன் கஜோல் திருமணத்திற்கு முன்பு கஜோல் அவருக்கு போட்ட கண்டிஷன் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது திருமணத்திற்கு முன்பு தேனிலவு குறித்து பேசும்பொழுது இரண்டு மாதங்கள் தேனிலவுக்காக பல நாடுகளுக்கு செல்ல வேண்டும்.

Social Media Bar

அதற்கு சம்மதித்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு ஒப்பு கொண்டுள்ளார் அஜய் தேவ்கன். ஆனால் திருமணம் முடிந்ததும் தேனிலவு கிளம்பிய பிறகு ஒவ்வொரு நாடாக செல்ல செல்ல அது அஜய் தேவ்கணுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது இதனை தொடர்ந்து 40 நாட்களிலேயே அவரால் தாங்க முடியாமல் திரும்ப ஊருக்கே கிளம்பி வந்து விட்டார் என்று பேட்டியில் கூறியிருக்கிறார் கஜோல்.