Connect with us

அந்த ஹாலிவுட் படத்தை அப்படியே காபி அடிப்போம்.. – கே.எஸ் ரவிக்குமாரிடம் யோசனை சொன்ன கமல்!..

Cinema History

அந்த ஹாலிவுட் படத்தை அப்படியே காபி அடிப்போம்.. – கே.எஸ் ரவிக்குமாரிடம் யோசனை சொன்ன கமல்!..

Social Media Bar

1996 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பான ஒரு வருடம் என சொல்லலாம். அந்த வருடத்தில்தான் இந்தியன், அவ்வை சண்முகி ஆகிய இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாகின. இவை இரண்டுமே கமலின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தன.

இந்தியன் திரைப்படத்தில்தான் முதன் முதலாக புதுரக மேக்கப் முறையை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் கே.எஸ் ரவிக்குமாரை சந்தித்தார் கமல்.

அவரிடம் ஒரு போட்டோவை காட்டி இது யார் என கண்டுப்பிடியுங்கள் என கூறியுள்ளார் கமல். யாரோ வெள்ளைக்காரன் மாதிரி இருக்கு சார் என கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார். உடனே கமல் அது நாந்தான் என கூறியுள்ளார். இந்தியன் படத்திற்காக அவர் போட்ட மேக்கப்பைதான் கே.எஸ் ரவிக்குமாரிடன் காட்டியிருந்தார்.

அதை பார்த்த கே.எஸ் ரவிக்குமார் சார் இதே மேக்கப் முறையில் நாமளும் ஒரு படம் பண்ணனும் சார் என கூறியுள்ளார். அதை கேட்ட கமல் மிஸஸ் டவுட்பயர்னு ஒரு ஹாலிவுட் படம். அதை வச்சி தமிழ்ல ஒரு படம் பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன். உங்களுக்கு ஓ.கேன்னா பண்ணலாம் என கூறியுள்ளார்.

கே.எஸ் ரவிக்குமாரும் அதற்கு ஒப்புக்கொள்ள அப்படி உருவான திரைப்படம்தான் அவ்வை சண்முகி திரைப்படம்.

To Top