Connect with us

அரை கிலோ மீட்டருக்கு வாழ்த்த நின்ற மக்கள்! –பாக்கியராஜ்னா என்னா மாஸ்னு தெரியுமா?

Cinema History

அரை கிலோ மீட்டருக்கு வாழ்த்த நின்ற மக்கள்! –பாக்கியராஜ்னா என்னா மாஸ்னு தெரியுமா?

Social Media Bar

1980களில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கிய படங்கள் எல்லாமே அப்போது பெரும் ஹிட் கொடுத்து வந்தன. மேலும் பாக்கியராஜ் நடிக்கும் படங்களும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தன.

சொல்ல போனால் இப்போது பிரபலமாக லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களை விடவும் அப்போது பிரபலமாக இருந்தவர் பாக்கியராஜ். அப்போதெல்லாம் பாக்கியராஜின் அலுவலகத்தை சுற்றி கூட்டமாகதான் இருக்கும்.

வாரம் தோறும் மக்களை பார்ப்பதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கிவிடுவார் பாக்யராஜ். அந்த சமயத்தில் பாக்கியராஜை பார்ப்பதற்கு அரை கிலோ மீட்டருக்கு கூட்டம் நிற்கும். அவர்கள் தரும் மாலையை வாங்கி வைப்பதற்கு மட்டும் அப்போது 7 உதவி இயக்குனர்கள் இருந்தார்களாம். அந்த அளவிற்கு பாக்கியராஜ்க்காக கூட்டம் கூடி இருந்தது.

அதே போல தினமும் உதவி இயக்குனராவதற்காக வாய்ப்பு கேட்டு ஒரு கூட்டம் அவரது அலுவலக வாசலில் நிற்கும். அனைவரையும் அழைத்து அவர்களிடம் பேசுவார் பாக்கியராஜ். அதில் உதவி இயக்குனர் ஆவதற்கான தகுதி இருக்கும் பட்சத்தில் அவர்களை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்வார்.

அந்த அளவிற்கு 1980களில் மாஸ் காட்டிய ஒரு இயக்குனர் பாக்கியராஜ் என்பது இப்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

To Top