Connect with us

பெரிய ஹீரோவா இருந்தா மட்டும் போதுமா! – மயில்சாமி இறுதி அஞ்சலிக்கு வராத பெரிய ஹீரோக்கள்! – அதிருப்தியில் மக்கள்

News

பெரிய ஹீரோவா இருந்தா மட்டும் போதுமா! – மயில்சாமி இறுதி அஞ்சலிக்கு வராத பெரிய ஹீரோக்கள்! – அதிருப்தியில் மக்கள்

Social Media Bar

தமிழில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் மயில்சாமி. பல பெரிய நடிகர்கள் படத்தில் இவர் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் பல வருடங்களாக இவர் சினிமாவில் இருந்து வந்தவர்.

நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் மயில்சாமி காலமானார். திரைத்துறையில் மிகவும் நன் மதிப்பை பெற்றவர் மயில்சாமி. திரை பிரபலங்கள் மற்றும் மக்கள் பார்ப்பதற்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் முக்கிய பிரபலங்கள் யாருமே மயில்சாமியின் இறுதி அஞ்சலிக்கு வரவில்லை. தற்போது மக்கள் மத்தியில் ட்ரெண்டில் இருக்கும் இளம் நடிகர்களில் கார்த்தி, சித்தார்த் ,விஜய் சேதுபதி மூவர் மட்டுமே இவரின் இறுதி அஞ்சலிக்கு வந்துள்ளனர்.

மற்ற பெரிய நடிகர்கள் யாருமே வரவில்லை. ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி திரைத்துறையில் இவர் மற்ற நடிகர்களுக்கு எல்லாம் மூத்த நடிகராக இருந்தவர் மயில்சாமி. அவருக்கு உரிய மரியாதையை இளம் நடிகர்கள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுவே காசு பணம் நிறைய வைத்துள்ள பெரும் நடிகர்கள் இறுதி அஞ்சலியாக இருந்தால் இப்படி இருப்பார்களா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதையடுத்து பெரும் நடிகர்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

To Top