Actress
மல்லி பூ வச்ச என் மச்சானே – பிக் பாஸ் ஜனனியின் க்யூட் வீடியோ
தமிழில் உள்ள நியூஸ் சேனலான ஐ.பி.சி தமிழில் பணிப்புரிந்து வந்தவர் ஜனனி. ஐ.பி.சி தமிழ் யூ ட்யூப் சேனலில் அவருக்கு சில ரசிகர்கள் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். எப்போது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் வந்தாரோ அப்போதில் இருந்தே அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர்.
ஜனனியின் அழகான சிரிப்பிற்கும், அவரது அழகான இலங்கை தமிழுக்கும் தனி ரசிக கூட்டம் உருவாகியுள்ளது.

ஜனனி ஆர்மி என அவருக்கு ஒரு குழுவே உருவாகியுள்ளது. பிக் பாஸிற்கு போன ஜனனி அவரது சமூக வலைத்தள பக்கங்களை நிர்வகிக்க ஆட்களை வைத்துவிட்டு சென்றிருக்கிறார் போல. அடிக்கடி அவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

அப்படியாக தற்சமயம் வெந்து தணிந்தது காடு படத்தில் வரும் மல்லி பூ வச்சு வச்சு வாடுது பாடலுக்கு ஜனனி நடிப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஜனனி கேரளா மாடலில் வெள்ளை புடவை கட்டி அழகாக வருகிறார் ஜனனி.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
