Bigg Boss Tamil
ஒரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிட்டியே!.. நிக்சன் செயலால் கடுப்பான ஐசு தந்தை!..
Bigboss Nixen Aishwarya: பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். அதனால் 7 வருடங்களாக பிக்பாஸ் சீசன் தமிழில் நடந்து வருகிறது. அதிலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பை விட அதிக பார்வையாளர்களை ஈர்த்தது என்றே கூறலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காதல் ஜோடியாவது இருந்து கொண்டிருப்பர். ஆனால் அந்த எந்த ஜோடிகளும் பிறகு வெளியில் வந்தப்பிறகு காதலித்ததாக தெரியவில்லை. அப்படியாக இந்த சீசனில் நிக்சன் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இடையே காதல் இருந்து வந்தது.
இந்த நிலையில் பிரதீப் முதற்கொண்டு பலரும் ஐஸ்வர்யா நிக்சன் காதல் குறித்து விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா சில நாட்களில் எலிமினேட் ஆனார். அவரது குடும்பத்தாரே ஐஸ்வர்யாவை எலிமினேட் செய்ய சொல்லி கேட்டு கொண்டதற்கிணங்கேதான் எலிமினேட் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெளியில் வந்த ஐஸ்வர்யா கூறும்போது பிரதீப் போன்ற பலரும் என் நன்மைக்காகதான் பேசியுள்ளீர்கள் நாந்தான் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன் என மன்னிப்பு கேட்டிருந்தார். அதற்கு பிறகு ஐசுவை பொதுவெளியில் சமூக வலைத்தளங்களில் என எங்குமே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் நிக்சன் மட்டும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை போட்டு வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பிரதீப் நிக்சனை பார்த்து ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டியேடா என கூறிய வீடியோவை ஐசுவின் அப்பா ஷேர் செய்துள்ளார். இதன் மூலமாக அவரது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
