Bigg Boss Tamil
கோபம் வர்ற மாதிரியெல்லாம் காமெடி பண்ண கூடாது.. கூல் சுரேஷ்க்கு வார்னிங் கொடுத்த கமல்!..
Bigg boss tamil Cool suresh: பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே ஒரே போராட்டமாக தான் இருந்து வருகிறது. ஆனால் முந்தைய பிக் பாஸ் அளவிற்கு இந்த பிக் பாஸ் சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று கேட்டால் அது சந்தேகமே என கூறலாம்.
இப்போது உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்கிறார்களே தவிர போட்டிகளில் பெரிதாக ஆர்வமாக இருப்பது போல தெரியவில்லை.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே மக்களை ஓரளவு சுவாரஸ்யமாக்கி வந்தவர் காமெடி நடிகர் கூல் சுரேஷ். கூல் சுரேஷிற்கு வெளியில் இருந்து அதிகமாக ஆதரவு இருக்கிறது என்றாலும் உள்ளே உள்ள போட்டியாளர்கள் பலர் அவருக்கு எதிராக இருக்கின்றனர்.
அவர் காமெடி செய்கிறேன் என்கிற பெயரில் அவர்களை கோபப்படுத்துகிறார் என்று நினைக்கின்றனர். இந்த நிலையில் இது குறித்து இன்று பேசிய கமல் காமெடிக்கு ஒரு எல்லை உண்டு. அது இல்லாமல் அவர்களை நீங்கள் கலாய்க்கும் அளவிற்கு நீங்கள் இன்னும் அவர்களிடம் நெருக்கமாகவில்லை.
னவே நான் உங்கள் அனைவரையும் 24 மணி நேரமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கமல் ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளார். இதனை அடுத்து இனி கூல் சுரேஷிடம் அதிகமாக நகைச்சுவைகள் தென்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
