Bigg Boss Tamil
மாப்ள இன்னைக்கே ஆரம்பிச்சிட்டார்… ஆர்.ஜே ஆனந்திக்கும் ரவீந்தருக்கும் இடையே வந்த சண்டை.. வீட்டுக்கு வெளியே அனுப்பிய பிக்பாஸ்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் துவங்கி அதில் ஆறு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருக்கின்றனர் ஆண்களில் மூன்று பேரும் பெண்களில் மூன்று பேரும் ஏற்கனவே போட்டியாளராக சென்று இருக்கின்றனர்.
பெண்களை பொறுத்தவரை தர்ஷா குப்தா, நடிகை சாச்சனா மற்றும் ஆர் ஜே ஆனந்தி ஆகியோர் இருக்கின்றனர். ஆண்களைப் பொறுத்தவரையில் சீரியல் நடிகர் தீபக், சத்யா மற்றும் பேட்மேன் ரவீந்தர் ஆகியோர் இறங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் போட்டி துவங்கிய உடனே இவர்கள் இருவருக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தும் ஒரு விஷயத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி வைத்திருக்கிறது.
கோட்டால் வந்த கலவரம்:
அதாவது வீட்டின் நடுவில் ஒரு கோட்டை போட்டு அதில் ஒரு பக்கம் ஆண்களும் இன்னொரு பக்கம் பெண்களும் இருந்து கொள்ளலாம் என்கிற ஒரு விஷயத்தை கொண்டு வந்துள்ளனர்.
பிக் பாஸில் போன சீசன் ஆண்கள் பெண்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் நபர்கள் அடுத்த பக்கத்திற்கு தாண்டி வரக் கூடாதா? அல்லது என்ன விதிமுறை என்பது குறித்து தெளிவான எந்த விளக்கமும் இல்லை.
இதனால் முடிவு எடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் மட்டும் நிறைய வசதிகள் இருக்கும் காரணத்தினால் அந்த பக்கம் செல்வதற்கே இரு தரப்பினரும் ஆசைப்படுகின்றனர். இதனால் ஆர் ஜே ஆனந்திக்கும் ரவீந்தருக்கும் இடையே இப்பொழுதே பிரச்சனை துவங்கி இருக்கிறது. இதனையடுத்து ஒரு முடிவுதான் எடுக்க சொன்னேன். அதையே உங்களால் செய்ய முடியவில்லையா என கூறி அனைவரையும் வீட்டுkகு வெளியே அனுப்பியுள்ளார் பிக்பாஸ்.
