Connect with us

பாலகிருஷ்ணா படத்துலயா கையை வைக்கணும்.. தளபதி 69 படத்தின் கதை இதுதானாம்.. அட கொடுமையே..!

balakrishna vijay

News

பாலகிருஷ்ணா படத்துலயா கையை வைக்கணும்.. தளபதி 69 படத்தின் கதை இதுதானாம்.. அட கொடுமையே..!

Social Media Bar

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதாலேயே தளபதி 69 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகபட்சமான வரவேற்பு இருந்து வருகிறது.

ஏனெனில் இந்த திரைப்படத்திற்கு பிறகு விஜய் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுகிறார். அதற்கு பிறகு அரசியலில்தான் அதிக கவனம் செலுத்த இருக்கிறார் விஜய்.

இந்த படத்திற்கு நிறைய விதிமுறைகளின் அடிப்படையில்தான் விஜய் நடிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஒரு தெலுங்கு படத்தின் தழுவல் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த படத்தின் கதையா?

தெலுங்கில் பிரபல நடிகரான பாலகிருஷ்ணா நடித்து வெளியான திரைப்படம்  பகவந்த் கேசரி இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதைகளத்தை கொண்ட ஒரு படமாகும்.

thalapathy 69

thalapathy 69

இதன் தளுவாலாக தான் விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படமும் எடுக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் கண்டிப்பாக ஒரு அரசியல் திரைப்படமாக தான் இருக்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

அதற்கு தகுந்தார் போல இந்த கதையும் அரசியல் கதையாக இருப்பதால் இதுதான் படமாகப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் ரசிகர்கள் கூறும் பொழுது இயக்குனர் ஹெச். வினோத் அப்படியெல்லாம் தெலுங்கு படத்தை பார்த்து படம் எடுக்க கூடியவர் கிடையாது.

ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு முக்கிய அரசியலை பேசக்கூடியவர் ஹெச். வினோத் அவருடைய சதுரங்க வேட்டை படமாக இருக்கட்டும் தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு போன்ற ஒவ்வொரு திரைப்படத்திலும் முக்கியமான ஒரு மோசடியை பேசியிருப்பார். அதனால் இந்த திரைப்படத்திலும் அந்த மாதிரி அரசியல் களமாகவே இருந்தாலும் அதில் முக்கியமான ஒரு விஷயத்தை பேசி இருப்பார் என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top