TV Shows
இவர் கூடதான் கல்யாணம்? நிம்மதியா வாழ விடுங்க.. காதல் விவகாரத்தில் மனம் திறந்த சிவாங்கி..!
விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஒரு சில பிரபலங்களில் சிவாங்கி மிக முக்கியமானவர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக முதன்முதலாக கலந்து கொண்டார். பிறகு டைட்டில் வென்றதன் மூலமாக இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்புகளும் வந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலமாக சிவாங்கி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியில் பங்கு பெற்ற காலம் முதலே சிவாங்கியின் காதல் குறித்து நிறைய கிசுகிசுக்கள் என்பது இருந்து வந்தது ஏற்கனவே குக் வித் கோமாளியில் பங்குபெற்ற நடிகர் அஸ்வினுடன் நெருங்கி பழகி வந்தார் சிவாங்கி.
உண்மையை கூறிய சிவாங்கி:
இதனை தொடர்ந்து சிவாங்கி அவரை காதலிப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு பிறகு நிகழ்ச்சிக்காக சும்மா காதலிப்பது போல இருவரும் பழகினாலும் இருவரும் உண்மையில் காதலிக்கவில்லை என்று கூறப்பட்டது.
அதற்குப் பிறகு சிவாங்கி அதிகமாக இசையமைப்பாளர் வித்யா சாகரின் மகனான ஹர்ஷா வதனுடன் சேர்ந்து பாடல்களை பாடி வந்தார். இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே கிசு கிசுக்கள் நிலவ துவங்கியது இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த சிவாங்கி கூறும் பொழுது இப்பொழுது எனக்கு திருமணத்தை பற்றிய எண்ணமே முதலில் கிடையாது மேலும் யாரையும் நான் காதலிக்கவில்லை. நான் காதலித்து எல்லாம் திருமணம் செய்ய மாட்டேன் அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும் எனவே அதனை குறித்த வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.