Bigg Boss Tamil
என்னையும் சேர்த்து கோர்த்து விட்டீங்களே.. புல்லி கேங்கை வச்சு செய்த கமல்!..
Kamalhaasan in Bigg boss: போன வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பை எலிமினேட் செய்தது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பானது. ஏனெனில் பிக்பாஸில் உள்ள பெண்கள் எல்லாம் சேர்ந்து போட்டியாளர் பிரதீப்பின் வார்த்தைகள் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரெட் கார்டு காட்டினார்கள்.
அதனையடுத்து எந்த வித கேள்வியும் இன்றி பிரதீப்பை பிக்பாஸ் விட்டு நீக்கினார் கமல்ஹாசன். ஆனால் பார்வையாளர்களை பொறுத்தவரை பிரதீப் எந்த தவறும் செய்யவில்லை என்றே தோன்றியது. ஏனெனில் கடும் சொற்களை கூறுவது என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் செய்ய கூடிய ஒன்றே.
அதற்கு தகுந்தாற் போல இந்த வாரம் மாயா கேப்டனாக ஆனதில் இருந்து தொடர்ந்து செய்த காரியங்கள் எல்லாம் திட்டம் போட்டு பிரதீப்பை அந்த கும்பல் அனுப்பி இருக்கிறது என்பதை வெளி கொண்டு வந்தது. இதனையடுத்து புல்லி கேங் என அழைக்கப்படும் ஜோவிகா, பூர்ணிமா, ஐஸ்வர்யா, மாயா அடங்கிய குழுவை விமர்சிக்க துவங்கினர் நெட்டிசன்கள்.

ஏன் எதற்கு என கேள்வி கேட்காமல் பிரதீப்பை நீக்கியதால் நடிகை ஷகிலா வரை கமல்ஹாசனை விமர்சித்து வீடியோ வெளியிட துவங்கினர். இதனால் கமல்ஹாசனுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த கூட்டத்தை நிற்க வைத்து கேள்விக்கேட்டுள்ளார் ஆண்டவர். உங்க பிரச்சனையில் என்னையும் சேர்த்து விட்டு சம்பவம் செய்துவிட்டீர்களே என கமல் பேசியுள்ளார்.
