பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி 2 வாரங்களாகியும் முந்தைய பிக்பாஸ் சீசன்களை போல ஆட்டம் சூடுபிடிக்காமல் தேமே என்று சென்றுக் கொண்டிருக்கிறது. ஹவுஸ்மேட்ஸ் பலர் எதற்கு வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் உண்பதும், உறங்குவதுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு இடையே 2 வாரமாக வாட்டர்மெலன் ஸ்டார்தான் கண்டெண்ட் கொடுத்து வருகிறார். இதற்கிடையே ஆதிரை – எஃப்ஜே லவ் கண்டெண்ட் செய்தாலும் பொதுவெளியில் வைத்து முத்தம் கொடுத்துக் கொள்வதெல்லாம் ஹவுஸ்மேட்ஸையும், ஆடியன்ஸையும் எரிச்சல்படுத்தும் விதமாக உள்ளது. அரோரா – துஷார் லவ் அதற்கு மேல். இரட்டை அர்த்தத்தில் அரோரா பேசுவது முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது.
மேற்கொண்டு துஷார் வீட்டு தலயாக இருந்தும் வீட்டை கவனிக்காமல் அரோரா பின்னாலேயே சுற்றியதால் வீட்டு தல பதவி பறிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதற்காக அவர் வருத்தப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் இந்த வாரத்தில் யார் மோசமான போட்டியாளர் என ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் சொன்ன நிலையில், வீட்டிற்குள் காதல் லூட்டி அடித்துக் கொண்டிருந்த அரோராவையும், ஆதிரையையும் கைக்காட்டியுள்ளனர் ஹவுஸ்மேட்ஸ். இதனால் இன்று ஆதிரையும், அரோராவும் ஜெயில்லுக்கு செல்கிறார்கள். அடுத்த முறையாவது இதையெல்லாம் புரிந்துக் கொண்டு போட்டியில் ஒழுங்காகா தொடர்வார்களா என்று பார்ப்போம்.
இந்த லவ் கண்டெண்டுகள் எடுபடாத சூழலில் வாட்டர்மெலன் ஸ்டார் – கானா வினோத் காமெடி கண்டெண்டுகள் ஆடியன்ஸிடம் எக்கச்சக்கமாக வொர்க் ஆகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.










