Bigg Boss Tamil
டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த தொகை.. இதுதான் காரணமாம்.!
கடந்த 3 மாதங்களாக மக்களின் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வெளியாகி கொண்டிருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த போட்டியாளர்கள் பலரும் ஃபைனல் வரை வந்தது என்பது பலருக்குமே ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.
105 நாட்களாக இந்த நிகழ்ச்சி நடந்து வந்தது. முதல் நாளில் இருந்தே சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் இருவருமே இதில் இருந்து வருகின்றனர். முதல் இரண்டு வாரங்களில் இவர்கள் இருவருமே பெரிதாக எதுவும் செய்யாமல் இருந்தனர்.
எனவே இவர்கள் சீக்கிரம் வெளியேறி விடுவார்கள் என்றுதான் பலரும் நினைத்து வந்தனர். ஆனால் நினைத்ததற்கு மாறாக பிக்பாஸ் ஃபைனல் போட்டியாளராக தேர்வாகியுள்ளார் முத்துக்குமரன். மேலும் 40 லட்சத்து 50,000 ரூபாய் பரிசு தொகையாக வென்றுள்ளார் முத்துக்குமரன்.
பிக்பாஸை பொருத்தவரை அதில் பிரபலங்கள் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார்களோ அதை பொறுத்துதான் அவர்களுக்கான சம்பளமும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் இல்லாதவர்களுக்கு அதிக தொகை சம்பளமாக கிடைக்காது.
இந்த நிலையில் முத்துகுமரனுக்கு ரூபாய் 10,000தான் தினசரி சம்பளமாக இருந்து வந்தது. ஆனால் மற்றவர்களுக்கு அதிக தொகை தரப்பட்டது. இந்த நிலையில் 105 நாட்களில் 10 லட்சத்து 50,000 சம்பளமாக பெற்றுள்ளார் முத்துக்குமரன்.
என்னதான் பிக்பாஸில் குறைவான சம்பளம் பெற்ற போட்டியாளர் என்றாலும் தற்சமயம் டைட்டில் ஜெயித்த போட்டியாளராக முத்துக்குமரன்தான் இருக்கிறார்.
