News
களத்தில் இறங்கும் விஜய்.. பரப்பரப்பான பரந்தூர்..சூடு பிடிக்குது..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே அரசியல் களம் சூடு பிடித்து காணப்படுகிறது. மற்ற நடிகர்களை போலவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவிட்டு பிறகு இவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றுதான் பேச்சுக்கள் இருந்து வந்தன.
ஆனால் போன வருட துவக்கத்தில் திடீரென அரசியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார் விஜய். அதுவுமில்லாமல் சினிமாவை விட்டு விலக போவதாகவும் பகீரங்கமாக அறிவித்தார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் எண்ட்ரி தமிழ்நாட்டிற்கே ஆச்சரியத்தை கொடுக்கும் விஷயமாக இருந்தது.
இந்த நிலையில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசியலில் தொடர்ந்து கள பணியில் இருந்து வருகிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய் ஏற்கனவே பல இயற்கை பேரிடர்கள் நடந்தப்போது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் பரந்தூருக்கு நேரில் செல்ல இருக்கிறார் விஜய். பரந்தூரில் விவாசாய நிலங்களை கையகப்படுத்தி விமான நிலையம் கட்டுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அவற்றை எதிர்த்து அங்கிருக்கும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க விஜய் சென்றுள்ளார். விஜய் தனது மாநாட்டில் கூறும்போது மக்களுக்கு விரோதமாக நடக்கும் எந்த ஒரு விஷயத்துக்கும் எதிராக நிற்பேன் என கூறியிருந்தார்.
அந்த வகையில் தற்சமயம் மக்களுக்கு ஆதரவாக கிளம்பியிருக்கிறார் விஜய்.
