ஜெயிச்சா பூமிக்கு.. இல்லன்னா சாமிக்கு!.. பிக்பாஸ் டாஸ்க்கால் ஆடிப்போன போட்டியாளர்கள்!..
Bigg boss tamil : பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே மக்கள் மத்தியில் அதற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. கடந்த வாரம் தினேஷ் கேப்டனாக ஆனது முதலே அவருக்கு அதிக வரவேற்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதற்கு முந்தைய வாரத்தில் மாயா ஏற்படுத்திய சலசலப்பை அடக்கிவிட்டார் தினேஷ் என பேசப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கானா பாலா வெளியேற்றப்பட்டார். அக்ஷயா, விக்ரம் சரவணன் போன்ற போட்டியாளர்களும் சும்மாதானே இருக்கிறார்கள். அவர்களையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்நிலையில் இன்று வைல்ட் கார்டில் 3 பேரை பிக்பாஸ் வீட்டிற்குள் களம் இறக்க போவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு நடுவே பிக்பாஸில் போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் தோல்வியடையும் மூன்று போட்டியாளர்கள் பிக்பாஸில் இருந்து நீக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு பதிலாக இன்னும் மூன்று பேர் வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதனால் மிகவும் பயத்தில் இருக்கின்றனர் போட்டியாளர்கள்!.