நாங்கதான் உங்களை பார்த்து அனுதாபப்படும்!.. விஜய் ஆண்டனி மீது வன்மைத்தை கொட்டிய ப்ளூ சட்டை மாறன்!.

இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரும் நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. நான் திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பெரும்பாலும் விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமான திரைப்படங்களாக இருப்பதால் மக்களும் அவரது திரைப்படங்களுக்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி வெகுவாக நம்பியிருந்தார். ஆனால் இது அந்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

vijay-antony
vijay-antony
Social Media Bar

இதற்கு நடுவே சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனத்தை அளித்திருந்தார். இதனால் கோபமடைந்த விஜய் ஆண்டனி ப்ளூ சட்டை மாறனை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

இது ப்ளூ சட்டை மாறனுக்கு கோபத்தை ஏற்ப்படுத்தியது. இதனால் நேற்று விஜய் ஆண்டனியை கேலி செய்து பதிவு போட துவங்கிய ப்ளூ சட்டை மாறன் இன்னமும் பதிவுகளை போட்ட வண்ணமே இருக்கிறார். அதில் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவுஜூவிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்று விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

 அதற்கு பதிலளித்த ப்ளூ சட்டை மாறன் ரத்தம், கொலை, ரோமியோ… ஹாட்ரிக் ஃப்ளாப் தந்ததுக்கு நாங்கதான் அனுதாபம் தெரிவிக்கனும். இவர் ஏன் காமடி பண்றாரு? என பதிவிட்டிருந்தார். மேலும் கில்லி ரீ ரிலிஸால் ரோமியோ படம் ஓடாமல் போனது என்றெல்லாம் பதிவிட்டு கிண்டல் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.